search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் உயிரிழப்பு"

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 65 வயது முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    திருச்சி:

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 65 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால், உறவினர்கள் யாருமின்றி தனியாக வந்து சிகிச்சையில் சேர்ந்தார். 4-ந் தேதி முதல் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரின் அனுமதி பதிவேட்டில் அவர், திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்காநகரை சேர்ந்த சூசைராஜ் (வயது 65) என பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகவரி தவறானது என்று தெரியவந்தது. இறந்த முதியவர் வெள்ளை நிற வேஷ்டி மட்டுமே அணிந்துள்ளார். அவர் குறித்த வேறு எந்த தகவலும் தெரியவில்லை. 

    இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீசார், இறந்த நபரின் புகைப்படத்தை வைத்து அவர் யார்? எதற்காக தவறான முகவரி அளித்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பன் (வயது 77). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் முதியவர் சுப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் இருந்த சுப்பனுக்கு கடந்த 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கைதிகளுக்கான சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு இறந்து விட்டார்.

    பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    மதுரை:

    ராமாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தீனுல்லா (வயது 68). இவருக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்த நிலையில் தீனுல்லாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தீனுல்லா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீனுல்லா பரிதாபமாக இறந்தார். இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 49 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 5 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 70 வயது நபரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் பக்பட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளையும் தூக்கிச் சென்று விடுவதுண்டு.

    இந்நிலையில், இங்குள்ள பக்பட் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவரை செங்கல் மற்றும் அரைக்கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இங்குள்ள டிக்ரி குராமத்தில் கடந்த 17-ம் தேதி விறகு சேகரிக்க சென்ற எனது சகோதரர் தரம்பால்(70) என்பவரை குரங்குகள் சூழ்ந்துகொண்டு கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எனவே, குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தாரர் வலியுறுத்தி வருகிறார்.



    ஆனால், இந்த சம்பவத்தை போலீசார் வேறுவிதமாக விவரிக்கின்றனர். உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியல் அருகில் தரம்பால் படுத்து தூங்கியுள்ளார். அதன்மீது குரங்குகள் குதித்ததால் செங்கல் சரிந்து அவர்மீது விழுந்ததில் படுகாயமடைந்த தரம்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance
    ×